உழவர் சந்தைகளில் விளைபொருட்களின் நச்சுத்தன்மையை கண்டறிய, கருவிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. விளைபொருட்கள் தரமானதாக மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தமிழக வேளாண்மைத்துறை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதில் ரசாயன பொருட்கள் தெளிப்பதாக புகார் எழுந்த நிலையில், உழவர் சந்தைகளில் உள்ள காய்கறிகளில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வுக்கு கருவிகள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு கொண்டுவரப்படும் பழங்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக […]
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், தற்போது விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை. வேளாண் பட்ஜெட் பற்றி விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் வரும் […]