புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக்கலை தொடங்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-22 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் […]
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடன் வசதி பெறும் திட்டம் குறித்து வேளாண்மைத்துறை அறிவிப்பு. வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை வீணாக்காமல் கிராம அளவில் ஒன்றுசேர்ந்து மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வேளாண் வளர்ச்சிக்கும் கிடங்குகள், தரம்பிரிப்பு மையங்கள், குளிர்சாதனக் கிடங்குகள் போன்ற உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். இத்தகைய உட்கட்டமைப்புகளுக்காக பல்வேறு திட்டங்களில் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் […]
வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக வேளாண்துறை அறிவிப்பு. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் எல்லாரும் அதிர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் எல்லாமே சோதனைக் காலமாக இருக்கிறது. வடமாநிலத்தில் விவசாய நிலங்களை திடீரென வெட்டுக்கிளிகள் ஆக்ரமித்துள்ளது. வெட்டுக்கிளிகள் வயல்களுக்குள் புகுந்து பயிற்களை சேதம் செய்து விடும் தன்மையுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்டவை. இதனால் வடமாநில விவசாயிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இதனிடையே, […]