கரூர் குளித்தலையில் பயிர்க்கடன் வாங்காத 244 விவசாயிகளுக்கு கடன் பெற்றதாக தகவல் சென்றுள்ளது. மேலும், இறந்தவர் ஒருவரும் கடன் வாங்கியதாக தவறுதலாக பதியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை துணை பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, பயிர்க்கடன் பெறாத 244 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற்றதாகவும், அதற்கான விசாரணைக்கு நேரில் வர வேண்டும் எனவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மன்னில் மேலும் ஒரு குளறுபடி என்னவென்றால், திருச்சி மாவட்டம் போதவூரை சேர்ந்த தவசு என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டே உயிரிழந்துவிட்டார். ஆனால், […]
சமீபத்தில் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான பயிர் கடன்களை தள்ளுபடி என உத்தவ் தாக்கரே அறிவித்தார். நேற்று புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி உத்தவ் தாக்கரே, விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது என கூறினார். மஹாராஷ்டிராவில் தற்போது சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியில் முதலமைச்சராக பதவியேற்று உள்ளார். சமீபத்தில் நடந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை […]
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி முறிந்தது. அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் பல குழப்பங்கள் […]