தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024 -25ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சுமார் 1 மணி நேரம் 57 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். இந்த வேளாண் பட்ஜெட்டில் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, பல்வேறு அரிப்புகள் மற்றும் மானியம் உள்ளிட்ட சலுகைகள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில், வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 மானியம் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்தார். […]