விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என மத்திய அரசு பதில். கதிரடிக்கும் இயந்திரங்கள், நடவு செய்யும் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழங்களை சுத்தம் செய்தல், வரிசைப்படுத்தல், தரம் பிரித்து ஆகிய இயந்திரங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.1,369 […]
விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது. பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் நடத்தி வரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்ற விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட எல்லையான தொழுப்பேடு சுங்கச்சாவடியில் பி ஆர் பாண்டியன் கைது செய்யப்பட்டு பெருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த முதல் ஆலோனை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் வேளாண் பாதுகாப்பிற்கான கொள்கைகள், பாசனம் மற்றும் வெள்ள நீர் மேலாண்மை திட்டங்கள், வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலகங்கள் மேம்பாடு ஆகியவை குறித்து […]
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரில் நாடாளுமன்றத்திற்கு சென்ற ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் மத்திய அரசு பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில், […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களாக போராடி வரும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை வலுப்படுத்துவதற்க்காக சாலை மறியல், போட்டோ போராட்டம், உண்ணாவிரதம் மற்றும் டிராக்டர் போராட்டம் போன்ற புதிய போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம். தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களை தற்பொழுது எளிமையாக்கி தாமதமின்றி விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தால் அதுவே போதுமானது. விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம், […]
விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்தம் – தமிழக அரசு. விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. எந்த சூழ்நிலைகளில் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் திருத்தும் செய்து தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர சட்டத்தால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப […]
வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான அறிவிப்புகளை கடந்த இரு தினங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இதில், இன்று சுயசார்பு திட்டத்திற்கான 3ம் கட்ட அறிவிப்பில், விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட 11 துறைகளுக்கான திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் விளை […]