அக்னி-1 ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ராணுவத்தின் சார்பில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவின் பலாசூரில் ((Balasore)) அப்துல் கலாம் தீவிலிருந்து காலை 8.30 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 15 மீட்டர் நீளம் கொண்ட அக்னி-1 ஏவுகணை 12 டன் எடை கொண்டதாகும். 1000 கிலோ வரை எடையை சுமந்து செல்லும். தரையிலிருந்து 700 முதல் 900 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும். […]