கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் அகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், உறைகிணறு, கருப்பு மற்றும் சிவப்பு நிற பானைகள், நத்தை கூடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்விடத்தில் தோண்டப்பட்ட மூன்றாவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் அழகிய பெண் […]