கூகுள்: இந்திய பெருங்கடல் வழியாக ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா நாடுகளை இணைக்கும்படி உமோஜா எனும் உலகின் முதல் பைபர் ஆப்டிக் பாதையை கூகுள் செயல்படுத்த உள்ளது. உலகளவில் டிஜிட்டல் இணைப்பை அதிகபடுத்தவும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தவும், ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியை ஆழப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு முயற்சிகளில் கூகுள் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதனை கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் […]
சோமாலியா அருகே இந்தியர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியர்கள் 15 பேர் உள்ளனர். லைபீரியா நாட்டு கொடியுடன் கப்பல் சென்றதால், இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்திய நிலையில், இந்தியர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் […]
மத்திய லைபீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குறைந்தது 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டேநேற்று (புதன்கிழமை) தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை தாமதமாக பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த டிரக் திடீரென விபத்துக்குள்ளானது, பின்னர் வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில் திரண்டிருந்த பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர். இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்றும், இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இஸ்ரேல் – […]
மேற்கு ஆப்பிரிக்கா புர்கினா பாசோவில் ஐஇடி குண்டுவெடிப்பில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 37 பேர் காயமடைந்தனர். புர்கினா பாசோவின் வடக்குப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை(செப் 4) பொருட்களை ஏற்றிச் சென்ற கான்வாய் வண்டி மீது ஐஇடி வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சஹேல் பிராந்திய ஆளுநர் ரோடோல்ப் சோர்கோவின் கூறுகையில், “இந்த சம்பவம் வடக்கில் போர்சங்காவிற்கும் ஜிபோவிற்கும் இடையிலான […]
ஆப்பிரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் குரங்கு அம்மையால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவாகியுள்ளது. பிரேசிலில் 41 வயதான ஒருவர் குரங்கு அம்மையால் உயிரிழந்துள்ளார். ஆப்பிரிக்காவிற்கு வெளியே நோயால் இறந்த முதல் நபர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகையில், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3,750 நோயாளிகளில், 120பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நேற்று(ஜூலை 29) இறந்துவிட்டதாக கூறினர்.
வேகமாக பரவும் குரங்கு அம்மை தொற்றால் 14,000 பேருக்கு பாதிப்பு.. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழப்பு. உலகளவில் 70க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 14,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குரங்கு அம்மை தொற்றால் ஆப்பிரிக்காவில் மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும், உயிர்களைக் […]
ஜூன் மற்றும் ஜூலை 2022 இல், வெப்ப அலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை தாக்கியது. இதனால் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு (104 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உயர்ந்து. ஸ்பெயினில், 45.7 டிகிரி செல்சியஸ் (114 ஃபாரன்ஹீட்) வரை எட்டிய வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையை எட்டியது. இதில் மாட்ரிட்டின் மேற்கே லாஸ் ஹர்டெஸ் நகரமும் அடங்கும். 1,500 ஹெக்டேருக்கு மேல் (3,700 ஏக்கர்) தீயால் எரிந்துள்ளது. இத்தாலியில், டோலோமைட்களில் உள்ள […]
லிபியா நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் அகதிகள் படகுகளில் செல்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக செல்லும்பொழுது அடிக்கடி கடலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 75 அகதிகளை ஏற்றி கொண்டு படகு புறப்பட்டுள்ளது. இந்த படகு லிபியாவின் மேற்கு கடலோர மாவட்டமான கும்சியிலிருந்து சென்றுள்ளது. திங்கள்கிழமையன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு […]
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 170 யானைகளை ஏலமிட ஆப்பிரிக்கா அரசு திட்டம். ஆப்பிரிக்க நாட்டில் ஒன்றான நமீபியாவில், யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மனிதர்கள் இடையிலான மோதல் அதிகரிப்பு, வறட்சி மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் யானைகளை காப்பாற்றும் நோக்கில் அவற்றை, ஆப்பிரிக்க நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பராமரிக்கும் வசதி கொண்ட யார் வேண்டுமானாலும் யானைகளை ஏலத்துக்கு எடுக்கலாம் […]
ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் பலர் சொந்த ஊருக்கு வர முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த 21ஆம் தேதி 16 தமிழர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். ஆனால் அவர்களது சொந்த ஊரான சென்னைக்குச் செல்வதற்கு வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக ஒரு ட்ராவல் ஏஜென்சியை அவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை […]
5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் 7,000 மாணவிகள் கர்ப்பம். உலகம் முழுவது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை நாட்டு அரசாங்கமும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், 7000-க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பல […]
சீனாவின் லட்சிய திட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் அறிவித்ததால் சீன அரசாங்கம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கென்யாவில் உள்ள நீதிமன்றம் சீனா சாலை மற்றும் பிரிட்ஜ் கார்ப்பரேஷனுக்கு சிஆர்பிசி வழங்கப்பட்ட 3.2 பில்லியன் டாலர் ரயில் ஒப்பந்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யும் போது நீதிமன்றம் இந்த அறிப்பை அறிவித்துள்ளது. மேலும் 3.2 பில்லியன் டாலர் சீன நிதியுதவி தரும் ஸ்டாண்டர்ட் கேஜ் ரயில்வே எஸ்ஜிஆர் திட்டத்தை வாங்குவதில் அரசு நடத்தும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை கபளீகரம் செய்யும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும் எருக்கஞ் செடிகளில் மட்டும் இருக்க கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு சென்று […]
கேமரூன், நைஜீரியா, சாட், மாலி, நைகர் ஆகிய ஆப்ரிரிக்க நாடுகளை அவ்வப்போது அச்சுறுத்தி வரும் பயங்கரவாத அமைப்பான போகோஹரம் மேற்கண்ட நாடுகளை ஒன்றினைத்து ஆட்சி செய்ய அவ்வப்போது தாக்குதல்களைநடத்தி வருகிறது. இந்நிலையில், அண்மையில் கேமரூன் நாட்டின் அம்ஜிடி நகரில் பொதுமக்கள் வழிபாட்டு தளத்தில் வழிபாடு முடிந்து வீடு திரும்புகையில் இரண்டு தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் அந்த இரண்டு தீவிரவாதிகள் உட்பட பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இது தவிர கேமரூன் நாட்டின் சிஹஹி பகுதியில் 2 […]
ஆப்பிரிக்கா நாட்டில், பன்றிக் காய்ச்சல் பர வந்துள்ளது. இதனை தடுப்பதற்காக தென் கோரிய அதிகாரிகள் 47 ஆயிரம் பன்றிகளை தேர்ந்தெடுத்து கொன்றுள்ளனர். இதனையடுத்து, இந்த பன்றிகள் கொல்லப்பட்ட பகுதியில் மழை பெய்துள்ளது. இதனால், இம்ஜின் ஆற்றின் ஒரு கிளை நதியில் இந்த பன்றிகளின் ரத்தம் கலந்துள்ளது. பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை.ஆனால், இந்த நோயினால் மனிதனுக்கு எந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்நிலையில், ஆற்றில் […]
ஆப்பிரிக்காவிலேயே அதிகம் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை 44 வயது மரியம் பெற்றுள்ளார். 44 குழந்தைகள் என்றவுடன் யாரோ வயதான பாட்டிக்கு இத்தனை குழந்தைகள் பிறந்திருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். மரியம்-க்கு வயது 40 தான் ஆகிறது.ஆம் தன்னுடை 13 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். முதலில் பிறந்ததே இரட்டை குழந்தைகள் தான். 6 முறை இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது, 4 முறை மூன்று குழந்தைகளும், 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. மேலும் மொத்தமாக […]
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவை சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும். தனது பரம்பரை தொழிலான சில்லரை வியாபாரத்தை முகமது டியூஜி, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெறும் தொழில் சாம்ராஜ்யமாக மாற்றியுள்ளார். விவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்ரிக்கா முழுமைக்கும் இவர் நடத்தி வருகிறார். […]
எல்லோருக்கும் பிடித்தமானதும்,பிஞ்சுகளால் விருப்பக்கூடிய விலங்கு யானை.அதுவும் குட்டி யானைகளை கண்டால் அதிக பிரியம் ஏற்படும் அது செய்யும் குறும்புகளை ரசித்து கொண்டே இருக்கலாம். யானை ஊருக்குள் வந்தால் ஊருரெல்லாம் யானையின் பின்னே செல்லும் ஊர் எல்லை வரை சென்ற வந்த யானையை வழியனுப்பி விட்டு வருவார்கள்.அன்று குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.யானை தும்பிக்கையில் ஆசிர்வாதம் வாங்கினால் அந்த கணேசனிடம் ஆசிர்வாதம் வாங்கியதாக எண்ணுவோம். பொதுவாக யானையின் தும்பிக்கை சுவாசிக்க, உணவு உண்ண, நீர் அருந்த, மோப்ப சக்தி போன்ற […]
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 90 யானைகள் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டது உயிரியல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் யானைத் தந்தங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் தந்தங்களுக்கான வேட்டையின் காரணமாக யானைகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. ஆம் போட்ஸ்வானா நாட்டின் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் யானைகள் கொல்லப்பட்டு கேட்பாரற்று கிடந்ததுள்ளதை ஆப்பிரிக்காவின் உயிரியல் ஆய்வாளரான மைக் சேஸ் என்பவர் ட்ரோன் கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போது இந்த கொடூர […]
உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம் இன்று 21 மார்ச், 1916 -பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கமருதீன். குழந்தையைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் […]