மகள் வேலைக்கு செல்வதை விரும்பாத தந்தை பெண் காவலராக பணியாற்றி வந்த மகளை துப்பாக்கியால் சுட்டு கண்களை கத்தியால் குத்தி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் . ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடேரா(33) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார் . தனது கனவான காவலர் பணியை 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கினார் . அப்போது ஒரு நாள் கடேரா காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது இருச்சக்கர வாகனத்தில் வந்த […]
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது. போலியோ பாதிப்பை தடுப்பதற்கு, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகள் முற்றிலுமாக போலியோ நோயில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முழு ஆப்பிரிக்க கண்டமும் போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. இதனையடுத்து, தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் சிறைச்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள். ஆப்கானிஸ்தானின் தலிபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு படைகளும், தலிபான் பயங்கரவாதிகளும், பக்ரீத் பண்டிகையையொட்டி 3 நாட்கள் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பு அமைதி ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, ஆப்கான் அரசு, நேற்று நூற்றுக்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்திருந்தது. இந்நிலையில், […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சமூக தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பயங்கரவாதிகள் இந்த பேரணியை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஐ.எஸ்.பயங்கரவாக்க இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.