இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ,அக்டோபர் 16 அன்று தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது. எவின் லீவிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் க்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எவின் லீவிஸ், 2021ஆம் வருடம் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பின் உடற்தகுதி காரணமாக அணியில் இடம் பெறவில்லை […]