Afghanistan: ஆப்கானிஸ்தானில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது, மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிப்பொழிவு காரணமாக 14000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சகத்தின் (Ministry of Disaster Management) செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக், கடும் மழை காரணமாக 637 வீடுகள் […]
ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சமீப காலமாக அதிகரித்து வரும் குண்டு வெடிப்புகள் ஏராளமனோர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் சாபுல் மாகாணத்தில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலியானதாகவும் மேலும் 12 க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பியதாகவும் சாபுல் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குல் இஸ்லாம் சியால் கூறியுள்ளார், மேலும் 28 பேர் குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும் அதில் பெண்கள் மற்றம் குழந்தைகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார், இந்த சம்பவத்திற்கு […]
இளம்பெண் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கியை பிடுங்கி அவர்களை சரமாரியாக சுட தீவிரவாதிகள் பயந்து ஓட வைத்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல மாகாணங்களை எல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அங்கு உள்ள ராணுவத்திற்கு இணையாக பயங்கரவாதிகளின் தலிபான் அமைப்பு உள்ளது.அதில் அதிக பயங்கரவாதிகள் உள்ளனர். மேலும் இவர்கள் ஆயுதமேந்தி ஆப்கானிஸ்தானை பிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் […]
ஆப்கானிஸ்தானில் 14-16 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களை கொலை செய்த இரண்டு தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றார். ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குமர் குல் என்ற சிறுமி, தனது பெற்றோர்களுடன் கிரிவா கிராமத்தில் வசித்து வந்தார். அவளின் தந்தை, அரசாங்க ஆதரவாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த வாரம் கிரிவா கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்குள் தாலிபன் தீவிரவாதிகள் நுழைந்து, அவரின் பெற்றோர்களை சுட்டுக்கொன்றனர். தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த […]
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விமானம், ரயில், பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் தனிமைப்படுத்தி வைக்கமாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்த 35 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களை இந்தோ – திபெத் எல்லையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர்.
உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின . இப்போட்டி லீட்ஸ்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக குல்படின் நைப் , ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.பிறகு சிறிது நேரத்தில் அடித்து விளையாட தொடங்கினர். சிறப்பாக விளையாடிய குல்படின் நைப் 12 பந்தில் 15 ரன்கள் அடித்தார்.அதில் 3 பவுண்டரி அடங்கும்.பின்னர் […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் பகுதிகளில் அவ்வபோது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காபூலில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது தீவிரவாதிகல் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து காபூல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தைக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்காவின் சிறப்பு தூதர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 17 வருடங்களாக தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் அரசு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் விளங்கி வருவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்கா முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தலிபான்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் […]
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி பாக்கிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். காபூலில் கடந்த வாரம் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் பலியானதற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் சாஹித் ககான் அப்பாஸி (Shahid Khaqan Abbasi), ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால், பாகிஸ்தான் பிரதமரது […]
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்திய வணிகர்கள் மத்தியில் ஊடுருவிய தீவிரவாதி ஒருவன், உடலில் குண்டுகளைக் கட்டி வந்து வெடிக்கச் செய்ததாக அரசுத் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு காரணமாக பதற்றமும் சோகமும் சூழ்ந்திருந்தது. காயம் அடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போன்று சில நாட்களுக்கு முன்பு காபூலில் வழிபாட்டுத் தலம் அருகே […]
ஆப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தார். காபூல் நகரின் சாஷ் தராக் பகுதியிலுள்ள தேசிய பாதுகாப்பு இயக்குநரக நுழைவு வாயில் அருகில் அதிகாலை நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் உட்பட இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. source: dinasuvadu.com