வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு – பார் கவுன்சில் அறிவிப்பு

lawyers dress

வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு வழக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் எந்த ஒரு வழக்கறிஞரும் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பார் கவுன்சில் விதிப்படி, வழக்கறிஞர்கள் ஆடை விதிமுறையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த நிலையில், நீதிமன்றங்களுக்கு விசாரணைக்கு செல்லும் வழக்கறிஞர்களுக்கு ஆடை … Read more

டெல்லியில் போலீசார் – வழக்கறிஞர்கள் மோதல்! காவல்துறைக்கு தோள் கொடுத்த தமிழ்நாடு ஐபிஎஸ் சங்கம்!

நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வக்கில்கள் வேலை நிறுத்த போராட்டம் ..,

தமிழகத்தில் நேற்று வழக்கறிஞர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, போராட்டம் நடத்தினர். குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து இருந்தார்கள். இதையடுத்து நாகர்கோவிலில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இறங்கினர். நாகர்கோவிலில் நீதிமன்ற வளாகம் முன் வக்கீல் சங்க தலைவர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கில் சங்க செயலாளர் வக்கீல் மரிய ஸ்டீபன், பொருளாளர் பார்த்தசாரதி மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் … Read more