கொரோனா வைரஸ் குறித்து பள்ளியில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையில்இருமல் , தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது […]