அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அன்வர் ராஜா (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு […]