அதிமுக அலுவலக சாவி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றது என ஈபிஎஸ் பேட்டி. சேலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. தீர்ப்பு மூலம் உண்மை, தர்மம் வென்றுள்ளது என தெரிவித்தார். கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் மின்கட்டண உயர்வு என்பது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார். அதிமுக அலுவலக சாவி […]
அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தபோது, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு […]
அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை […]
ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அமச்சர் சிவி சண்முகம் ஏற்கனவே போலீசில் […]
ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி தொண்டர்கள் ஏற்பார்கள் என அதிமுக அலுவலகம் சென்ற ஈபிஎஸ் பேட்டி. அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, 72 நாட்களுக்கு பின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ஈபிஎஸ்-யுடன் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், வைத்திலிங்கம், எஸ்பி […]