சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???
கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற தடை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு […]
தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.