தமிழக மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவோம் என சசிகலா பேட்டி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பலாம், இது உட்கட்சி பிரச்சனை, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள். பிரதமர் மோடி தான் இருவரது பிரச்சனையை தீர்த்து […]
ஆவணங்களை தாக்கல் செய்ய நாளை மாலை வரை ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புகளுக்கு நீதிபதி அவகாசம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ், ஈபிஸ் தரப்பு வாதங்களை 2 நாட்களாக கேட்ட நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயசந்திரன். நேற்று ஓபிஎஸ், […]
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த 1.50 கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது […]
ஒற்றை தலைமைதான் தேவை என்பது பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம் என ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று இரண்டாவது நாளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஜெயசந்திரன் முன்பு ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடி வருகிறார். நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், […]
அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது என ஈபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை 2வது நாளாக இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு முடிந்த நிலையில், இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன. உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பதை விளக்குமாறு நேற்று […]
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? என கேள்வி. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு. அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆர். வைத்திலிங்கம், இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் வைத்திலிங்கத்தை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதன்படி, கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை […]