சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்களை இந்த நடப்பு கூட்டத்தொடர் முழுக்க சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். கேள்வி நேரம் முடிந்து விவாதம் நடத்தலாம் என கூறியும் அதிமுக மறுத்து அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் தரப்பில் கூறபடுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி வழங்கப்படாததை கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை […]
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக கட்சிகளோடு விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர். இருந்தும் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதம் […]
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎஸ் தலைமை தாங்கிவருகிறார். மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதில் செங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்ட கூட்ட்டத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஒரு நன்மையையும் ஏற்படவில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 15 மாத காலமாக […]