அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மீதான 4 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரம் ஆளுங்கட்சியை எதிர்த்து மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை, ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து, அ.தி.மு.க எம்.பியும், முன்னாள் […]
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் ஓ.பி.ரவீந்திரநாத் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தேனி மக்களவை எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான இடத்தில் 2 வயது ஆண் சிறுத்தை உயிரிழந்து. சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் அந்த இடத்தில ஆட்டுப்பட்டி அமைத்து இருந்த அலெக்ஸ்பாண்டியன் உட்பட 2 தோட்ட தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அந்த இடத்திற்கு உரிமைதாரரான எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக சம்மன் […]
அதிமுக மாநிலவை எம்.பி. முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அதிமுக கட்சியின் மாநிலவை எம்.பி. முகமது ஜான்-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று அவர் உயிரிழந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் எம்.பி. முகமது ஜான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவரின் மறைவிற்கு தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து ஈரானில் மீன்பிடி தொழிலுக்காக 400 மீனவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய […]