சென்னை : அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வி.கே.சசிகலா, “அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுவதாக முதன்முதலாக கேள்விப்படுகிறேன். அதிமுகவில் இருந்துகொண்டு அவ்வாறு செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வந்த பிறகு, அரசியல் குறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் பேசுவார். இந்தியாவின் 3வது பெரிய இயக்கமான அதிமுக சிலரின் சுயநலத்தால் வீழ்ச்சி யாரையும் கட்சியில் இருந்து நீக்கக் கூடாது […]
சென்னை வானகரத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருறகிது. அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த செயற்குழு ,பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அதற்கேற்றாற்போல இன்றைய அதிமுக கூட்டத்தின் முகப்பு தோரணங்கள் எல்லாம் பழைய பாராளுமன்ற கட்டம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் செயற்குழுவில் பிரதான கட்சி நிர்வாகிகள் கலந்தாலோசித்து […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் எனவும்,தவறாமல் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தலைமைக் கழகம் அறிவிப்பு விடுத்துள்ளது.ஆனால்,அதில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் பெயரில்லாமல் தலைமை நிலையச் செயலாளர் என்ற பேரில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி இன்று நடைபெற உள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் […]
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.ஆனால், வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என ஓபிஎஸ் ஆதரவாளரும்,முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நேற்று தெரிவித்திருந்தார். அதே சமயம்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் […]
முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் அமைச்சர் சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அதிமுக,கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக உழைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பொய் பிரச்சாரம் செய்வதற்கு கண்டனம் […]