இந்தாண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு. தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2022 -ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற […]