ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பழங்காலத்தில் உபயோகப்படுத்திய தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற பகுதிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள், அரசர்கள் உபயோகித்த பொருட்கள், இடங்கள், தடையங்களை ஆய்வு செய்யும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகித்த செப்பு கிரீடங்கள், அம்புகள் ஆகியவை தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்த அகழ்வாய்வில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அகழ்வாராய்ச்சி குழு அறிவித்துள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழ்வுப் பணி தொடங்கியுள்ளது. முதன்முதலாக ஆதிச்சநல்லூரில் 1876-ல் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. பின், 1903-2004ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் 2004-2005 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி குழுவினர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை […]