மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆதார் இணைப்பு மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தாலும், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது (காமன் சர்வீஸ்) மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. […]
ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. புதுக்கோட்டையில் காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சிறுவனின் ஆதார் விபரம் இல்லாத காரணத்தால், சிறுவனை கண்டறிய முடியவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆதார் விவரங்களை வழக்கு விசாரணைக்கு புலன் விசாரணை அமைப்புகளுக்கு வழங்கலாமே? என […]
தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் 32 கோடிப் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் என்னும் அரசுசாரா அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 32கோடிப் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அனுமதி கிடைத்ததும் மேலும் 54கோடியே 50லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இந்த இணைப்புக்கு எவ்வளவுக் […]
தற்போது அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்கு ஆதார் கட்டயமாக்கபட்டு வருகிறது. இதனால் அதார் இதுவரை எடுக்காதவர்களும் அதார் எடுக்க முன்வந்து எடுத்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிறைகைதிகளுக்கும் அதார் எடுக்க வேண்டும் என கேரளா அரசு சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கேரளா டிஜிபி ஸ்ரீலேகா அளித்த பேட்டியில், ‘அனைத்து தரப்பு மக்களும் ஆதாருடன் இணைக்கபடுகின்றனர். அதுபோல், சிறை கைதிகளையும் அதார் திட்டத்தில் இணைக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளின் தகவல்கள் மற்றும் அடையாளங்களை பதிவு செய்யும் […]