போலீஸ் அடித்து மணிகண்டன் இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம். முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் டிசம்பர் 4-ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட அப்பகுதி போலீஸார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் மணிகண்டன் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்று பிடித்தனர். அவரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த பின்னர் தாயாரை வரவழைத்து […]