சென்னை : நேற்று (டிசம்பர் 4) சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த சையது குலாப் எனும் 22 வயது இளைஞர், கட்டடத்தின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். அரசு குடியிருப்பு கட்டிடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டிடம் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை சீர் […]
சென்னை அடையாறு ஆற்றின் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கழிவுநீர் அதிகமாக கலந்து கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இந்த முகத்துவாரத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைந்து காணபடுகிறது. தற்போது இந்த காலமானது மடவை மீன்களின் இனபெருக்க காலமாகும். இதனால் ஆடையாறு முகத்துவாரத்திற்கு வந்த மீன்கள் செத்துமடிந்தன. இந்த இறந்த மீன்கள் லட்சகணக்கில் சென்னை கடலோரம் கரைஒதுங்கின.