கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரிப்பு. கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதனை சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல். கோவோவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை W.H.O. அவசரகால பயன்பாட்டிற்கு அங்கரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கோவோவாக்ஸின் சிறந்த பாதுகாப்பு மற்றும் செயல்திறனை காட்டுகிறது […]
உயிருக்கு ஆபத்து விளைவிப்பது குறித்து தொடர் மிரட்டல்கள் வருவாதல் இசட் ப்ளஸ்(Z+) பாதுகாப்பு வேண்டும் என்று சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆதர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும்,ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்,சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா,தடுப்பூசி விநியோகம் குறித்து தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவாதாக மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கொரோனா […]
சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்தியாவுக்கு வெளியே தடுப்பூசி உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளார் உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில், இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஸ்ட்ரா ஜெனேகா கொரோனா தடுப்பூசியை சிரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தயாரிக்கிறது. இந்நிலையில்,சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, அடுத்த சில நாட்களில் ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்று வெள்ளிக்கிழமை அன்று […]
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, பிப்ரவரி-க்குள் சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தார். இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு கிடைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்திற்குள் பொது மக்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று அவர் கூறினார். இந்த தடுப்பூசிக்கு அதிகபட்சமாக ரூ .1,000 விலை இருக்கும் […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ .1000 என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தார். உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ககொரோனா தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பயோஃபார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. தானாக முன்வந்த 1077 தன்னாலர்வர்கள் மீது […]
டிசம்பர் மாதத்திற்குள் 3 முதல் 4 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தது. இந்தியாவில் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் […]
ஆக்ஸ்போர்டு கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் சோதனை செய்ய அனுமதி கோரவுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, […]