நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான ஒரு நிறுவனம் ஆகும். காரணம், இந்த நிறுவனம் தான் இந்திய பங்குசந்தையில் அதிவேகமாக வளர்ந்து வந்த அதானி பங்குகள் குறித்து அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன் வைத்து இந்திய பங்குசந்தையையே ஆட்டம் காண வைத்தது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் அதானி நிறுவனனத்தை மட்டுமல்ல அமெரிக்காவிலும் கூட பல்வேறு நிறுவனங்களின் மீது நிதி மற்றும் அந்நிறுவனங்களின் பொருளாதார கொள்கைகள் […]
டெல்லி : அதானி குழுமம் மீதும் கெளதம் அதானி மீதும் அமெரிக்க வழக்கறிஞர் குழு குற்றசாட்டை முன்வைத்து வழக்கு தொடர்ந்துள்ளனர். அதானி குழுமம் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதானி குழும விளக்கம் அளிக்கவும் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, செபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை […]
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச புகார் காரணமாக நேற்று அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தன. மேலும், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு சர்வதேச சந்தைகளில் முதிலீடுகளை ஈர்க்க உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடபட்டது. இந்த குற்றசாட்டை அடுத்து, அமெரிக்காவில் முதலீட்டுக்கான கடன் பத்திரங்களை வெளியிடும் முடிவை தற்காலிகமாக அதானி குழுமம் நிறுத்தி வைத்தது. அதானி குழுமம் – அமெரிக்க வழக்கறிஞர்கள் […]
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை இந்திய பங்குசந்தையில் பலமாக எதிரொலித்தது. அதனை தொடர்ந்து, தற்போதும் அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த குற்றசாட்டு இந்திய பங்குச்சந்தையை பாதித்தது. அமெரிக்க வழக்கறிஞர்கள், அதானி குழுமம் மீது, அந்நிறுவனம் இந்தியாவில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதனை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் குற்றசாட்டை […]
டெல்லி : அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், பல்வேறு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், இதனை அடுத்து அந்நிறுவனம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், அமெரிக்காவில் முதலீடு கோரும் கடன் பத்திர வெளியீடு திட்டத்தை […]
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம், சர்வதேச முதலீடுகளை பெற அவர் முயற்சிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதானி மீது வழக்கு தொடரபட்டுள்ளதால், இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகள் மற்றும் அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்துள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகள் […]
டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய குற்றசாட்டை முன்வைத்தது. முதலீட்டாளர்களை ஈர்க்க பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி செயல்படுகிறார் எனக் கூறியது. இதனை அடுத்து, இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. தற்போது அதேபோல மீண்டும் ஒரு அமெரிக்க குற்றசாட்டை அதானி குழுமம் எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்திய பங்குசந்தையில் அதானி குழுமம் மொத்தமாக 10% வரை சரிவை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அதானி […]
Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய […]
சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகளாவில் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொழில் தொடங்க, தொழிற்சாலை அமைக்க, தொழிற்சாலை விரிவுபடுத்த என பல்வேறு விதமாக முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். TNGIM2024 : புதிய நிறுவனங்கள்… புத்தம் புது வேலைவாய்ப்புகள்.. சின்ன லிஸ்ட் இதோ… இந்த இரண்டு நாள் மாநாட்டில் மொத்தமாக 6.64 லட்சம் […]