சென்னை : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு நேற்று இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அப்போது அங்குள்ள அர்த்த மண்டபத்தின் வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அர்த்த மண்டபத்தில் இளையராஜா அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி பேசுபொருளாக மாறியது. இது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் ஒன்றையும் அளித்து இருந்தது. அதில், அர்த்த மண்டபத்த்தில் அர்ச்சகர்கள், மடாதிபதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். என்று விளக்கம் அளித்து இருந்தது. இச்சம்பவம் […]
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மற்றும் திராவிட சிந்தத்தைப் பேசும் நபர்களைத் தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அதில் அவர், “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு […]
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடம் பற்றியும் தெலுங்கு மக்கள் பற்றிய சர்ச்சைப் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, பெரும் சர்ச்சை எழுந்தவுடன் கஸ்தூரி விளக்கம் அளித்தார், பின்னர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து தனது […]
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது மன்னிப்பு கடிதத்தில், “பாரதத் தாயின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் பெருமை கொண்ட உண்மையான […]