கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.இந்த அணி நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில்,செயற்குழு ஒப்புதலுடன் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. இரு அணிகள் மோதல்: இதனையடுத்து,கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.அதன்படி,தலைவர்,இரு துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர்,பொருளாளர்,செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும்,நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.மொத்தம் […]