PM Modi : கொரோனாவுக்கு மருந்து பிரதமர் மோடி பொறுப்பில் இருந்ததால் தான் கண்டுபிடிக்கப்பட்டது என நடிகர் செந்தில் பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி நெருங்கும் வேளையில், அரசியல் தலைவர்கள் , வேட்பாளர்கள் மட்டுமல்லாது நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர். இதனால் தற்போது தான் தமிழக தேர்தல் களம் என்பது களைகட்ட ஆரம்பித்துள்ளது. திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பாஜக நட்சத்திர பேச்சாளர் நடிகர் செந்தில் இன்று […]
தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அவதூறு பரப்புவதாக நடிகர் செந்தில் புகார் அளித்துள்ளார். நடிகர் செந்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதன்முலம் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக புகார் தெரிவித்தார். மேலும், தன் பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை நீக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 20 இராணுவ வீரர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை பிரபல நடிகரான செந்தில் தெரிவித்துள்ளார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் தமிழகத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லடாக் சீன எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான செந்தில் ட்வீட்டரில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முந்தைய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் செந்தில். இவர் மற்றும் கவுண்டமணி காம்போ பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இப்போதும் இவர்கள் ரசிகர்கள் பலரின் பேவரட்டாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் டுவிட்டரில் புதிதாக இணைந்துள்ளார். இதனை அவர் ஒரு பதிவோடு வெளியிட்டுள்ளார். அதில், நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் […]
அமமுகவின் அமைப்பு செயலாளராக கதிர்காமு ,நடிகர் செந்தில் உள்பட 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது.கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்த நிலையில் அமமுகவின் அமைப்பு செயலாளராக 5 பேரை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன். அதன்படி 1.சிவ ராஜமாணிக்கம் ,2.கதிர்காமு,3.தேவதாஸ்,4.ஹென்றி தாமஸ்,5.செந்தில் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.