ஆர்யா கலந்துகொண்ட , எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தாலும் நடுவில் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். இறுதியில் ஆர்யா திருமணம் செய்து கொள்பவரை அறிவிப்பார் என்று எதிர்ப்பார்த்தவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும் இருந்தது. இந்த நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பிறகு ஆர்யா ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அது என்ன படம் என்றால் கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் சந்திரமௌலி படம்.