சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ரஜினிகாந்த் உடன் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசி வருகின்றனர். அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது. நவம்பர் மாதம் ரஜினிகாந்த் புதிய கட்சியை துவங்குவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதனால், இன்று முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது . இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார். அதன் படி அதிமுக கூட்டணி – 57,511 வாக்குகளையும் , திமுக கூட்டணி – 54,844 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி – 523 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இந்நிலையில் அதிமுக கூட்டணி , திமுக கூட்டணியை விட 2,667 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி –32511 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக – 34052 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 501 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 1541 வாக்குகள் ஆகும்.
வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது .வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: அதிமுக கூட்டணி – 4,406 வாக்குகள் பெற்றுள்ளன. திமுக கூட்டணி – 3,994 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி – 400 வாக்குகள் பெற்றுள்ளன.
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் மக்களவை தொகுயில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுவதாக இருந்தது.ஆனால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதால், அவர் கடும் அதிருப்தி அடைந்தார். […]
வேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஏ.சி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளதுமூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இதனால் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் வேலூர் தொகுயில் புதிய நீதிக் […]