மன அழுத்த்தால் மாரடைப்பு உண்டாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து 40 வயதில் வரும் மாரடைப்பு 20 வயதிலேயே கண்டறியும் முறையை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை புரிந்துள்ளனர். இதில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் முன்னோடி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார். தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் நிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் […]
தூத்துக்குடி அண்ணாநகர் 9 வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக கடந்த 5ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரியம்மாளின் கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது. […]