உலகிலேயே மிக உயரமான இமயமலையில் இந்த எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 8,848.86 அடி உயரம் கொண்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே இந்த மலையில் ஏற முடியும் என்பதை முறியடிக்கும் விதமாக இரண்டு கால்கள் இல்லாதவரும், கண் பார்வை இல்லாதவரும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை மிக குறுகிய நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சான் யிங் ஹங் என்ற பெண்மணி. இவர் ஹாங்காங்கை சேர்ந்த முன்னாள் ஆசிரியர். […]
நாட்டின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைய உதவிடும் வகையில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கையால் வேளாண் துறை வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். எந்த ஒரு நாடும் தனித்திருந்து வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்று கூறிய சுரேஷ் பிரபு, பிற நாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். […]