ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பயன்படுத்திய முக கவசத்தை வீசியும், சிறுநீர் கழித்தும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி […]