சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக நடக்கும் பாலியல் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகும்போதெல்லாம் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. எனவே, பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் தெரிவித்தும் வருகிறார்கள். அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்து ஆவேசத்துடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தினமும் செய்தித்தாளில் பார்த்து கொண்டு இருக்கிறீர்களா? 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை..இந்த […]
Puducherry: புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. READ MORE – பாலியல் வன்கொடுமையால் கொலை…சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்.! தற்போது, இந்த கொலை வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து புதுச்சேரி […]
Puducherry : முதல்வர் ரங்கசாமி உத்தரவளித்ததை அடுத்து புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். கடந்த 2ம் தேதி புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் மாயமான 9 வயது சிறுமி, மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து காவல்துறை […]
Puducherry: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் கடந்த 2ஆம் தேதி மாயமான 9 வயது சிறுமி, 3 நாட்கள் கழித்து நேற்று அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டியபடி, சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. READ MORE – தூக்கில் போடுங்க…புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.! வலுக்கும் போராட்டம்.! இந்த சம்பவம் தொடர்பாக விவேகானந்தன் […]
Puducherry: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் போராட்டக் களமாக மாறியுள்ளது புதுச்சேரி மாநிலம். புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் தான் கொல்லப்பட்டது என அம்பலமாகியுள்ளது. READ MORE – தண்ணீருக்கு அடியில் மெட்ரோ ரயில்… பிரதமர் மோடி முதல் பயணம்.! இச்சம்பவம் தொடர்பாக, கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த மோகித் என்பவர் தனது சகோதரன் மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒன்றாக வசித்த காலங்களில் மோகித்தின் சகோதரன் புபேந்திராவுக்கு மோகித்தின் மனைவி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மோகித்தின் மனைவி புபேந்திரா தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததை கணவனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து இனி வீட்டிற்கு வரவேண்டாம் என மோகித் கூறியுள்ளார். இருந்தாலும் புபேந்திரா தொடர்ந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வந்த புபேந்திராவை […]
வரும் 30-ஆம் தேதி வரை லெப்டினன்ட் அமிதேஷ்க்கு நீதிமன்ற காவலை நீடித்து நீதிபதி திலகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் விமானப்படை அதிகாரியை கைது […]
கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மூன்று பருவமாக பயணாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் […]
பிரதமரின் கிசான் திட்ட மோசடி தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தீபா தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது வருகிறது. […]
கரூரில் பிரதமர் கிசான் திட்டத்தில் போலியாக 1500 பேர் சேர்க்கப்பட்டது மற்றும் ரூ.60 லட்ச மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு நிதி வழங்கப்படும் கிசான் திட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 78,517 விவசாயிகள் பயனாளிகளாக உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 3,282 பேர் விவசாயிகளாக பதிவு செய்துள்ளனர். அதில், சுமார் 1,500 பேர் போலி என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், […]
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சேர்ந்தவர் 38 வயது பெண் இவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் மேலும் இவருக்கு 17 வயதுடைய மகன் மற்றும் 15 வயதுள்ள ஒரு மகளும் உள்ளனர் , இந்த நிலையில் இவரை சகாபுதீன் என்பவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார் . மேலும் இருவர் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உட்பட மூன்று பேர் வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளனர், மேலும் […]
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர், தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் […]
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் 4 பேரை, குரூப்- 2ஏ தேர்வில் முறைகேடாக தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைத்ததாக, புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவலர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம், போலீசார் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கைக்கு நேரில் சென்றபோது காவலர் சித்தாண்டி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிசி ) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து […]
கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும், எழுத முடியாதபடி உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி ( teachers recruitment board […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி 8,826 பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வாகி இருப்பதால் முறைகேடு நடந்து இருப்பதாக புகார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 26-ம் […]
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்ட மசோதாவை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார். இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் […]
குரூப்-1 நேர்முகத்தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதாக புகார் எழுந்துள்ளது. தேர்வர்களை மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு நேர்காணல் செய்வார்கள். அரசுத் தேர்வு ஆர்வலர்கள் எதிர்பார்த்த TNPSC குரூப் 1-ன் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வு பணியாளர் ஆணையமான TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 1-ன் MAIN Exam எனப்படும் முதன்மைத் தேர்வு கடந்த […]
சீனாவில், RYB Eduction என்ற வணிக நிறுவனம் நடத்தும், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் நடந்த துஷ்பிரயோகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அங்கு தங்க வைக்கப் பட்ட குழந்தைகளுக்கு போதைவஸ்து கொடுத்து, மருத்துவ பரிசோதனை செய்யப் பட்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். RYB Eduction நிறுவனத்திற்கு சீனா முழுவதும் கிளைகள் உள்ளன. அதன் பங்குகள் நியூ யார்க் பங்குச் சந்தையில் விற்கப் படுகின்றன. அது நடத்தும் பராமரிப்பு நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக […]