டமாஸ்கஸ் : உலகமே உற்றுநோக்கும் தலைப்பு செய்தியாக தற்போது மாறி இருக்கிறது சிரியா நாட்டின் உள்நாட்டு போரும், அந்நாட்டு அதிபர் தப்பியோடிய தகவலும் தான். உள்நாட்டில் பல்வேறு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமித்து வந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு சிரியா நாட்டின் தலைநகரை கைப்பற்றியுள்ளது. இதனால், சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் அசாத் தனி விமானம் மூலம் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். அவர் தற்போது ரஷ்யா மாஸ்கோவில் […]