நாளை முதல் அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ள நிலையில், 115 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தை பொறுத்தளவில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக,ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழு. ஒமைக்ரான் தடுப்பு […]
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் நமது தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் பணி புரிந்தும்,வாழ்ந்தும் வருகின்றனர்.அவ்வாறு,உலகம் முழுவதும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக,புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில்,வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு,தமிழ்நாடு […]
தமிழகத்தையும், தங்கள் குடும்பத்தையும் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரணாக அமையும் என்று முதல்வருக்கு எம்.பி கனிமொழி நன்றி கூறியுள்ளார். வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம் ” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். அதன்படி,பல்வேறு புலம்பெயர் தமிழர் நல […]
பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் பண்டோரா பபர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த ஆவணத்தில் உள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி வழங்கும் 14 […]
வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான ‘அம்போடெரிசின்-பி’ மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சருக்கு எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை பிளாக் பங்கஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.அதாவது,கொரோனா நோயாளிக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால்,கண்,மூக்கு உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைகிறது.மேலும், மூளையை தாக்கி செயலிழக்க வைத்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மேலும்,தமிழகத்தில் இதுவரை […]
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் (ஆன்லைன்) வாக்களிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் விதிமுறைகளில் திருத்தம் செய்ய மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறைக்கு தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் […]
13 ஆம் ஐபிஎல் டி-20 போட்டி, இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது. இதனைதொடர்ந்து, மார்ச் 29ல் தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள், ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியா-தென்னாபிரிக்கா இடையான போட்டிகள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ரத்து செய்தது. மேலும், ஐபிஎல் […]