அறிவியல் அறிஞர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்…!

அறிவியல் துறையில் சிறந்து விளங்கி பல விருதுகளை பெற்ற அப்துல்கலாம். 

அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினை பயன்படுத்தி, தனது திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர் ஆவார். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் அப்துல் கலாம் பற்றி பார்க்கலாம்.

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் ராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வள்ளலார் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி  பொறியியலும் பயின்றார். அப்துல்கலாமை பொறுத்தவரையில், அரசியலிலும், விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்கிய ஒரு நபர் ஆவார்.

1960 ஆம் ஆண்டில் சென்னையில் பட்டப்படிப்பை முடித்த அப்துல்கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் அவர்கள் இந்திய ராணுவத்திற்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்து கொடுத்து தனது பணியை தொடங்கினார்.

இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்,  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை தொடர்பான தொழிநுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டின் காரணமாக இவர் இந்திய ஏவுகணை நாயகன் என போற்றப்பட்டார்.

1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் எஸ். எல்.வி – 3 திட்டத்தின் இயக்குனர் ஆனார். எஸ். எல்.வி – 3 ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 இல் ஏவியது. இது கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் எஸ். எல். வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது.

தொடர்ந்து அறிவியல் துறையில் பல சாதனைகளை புரிந்த அவர், 1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “கலாம், ராஜூ ஸ்டென்ட்” என பெயரிடப்பட்டது. மேலும், 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி “கலாம், ராஜூ டேப்லெட்” என்று பெயரிடப்பட்டது.

அறிவியல் துறையில் இவரது சாதனையை பாராட்டி, இங்கிலாந்தில் உள்ள  உல்வெர்ஹாம்டன் பல்கலைக்கழகம், கடந்த 2007 ஆம் ஆண்டு, அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. எடின்பரோ பல்கலைக்கழகம், கடந்த 2014-ஆம் ஆண்டு இவருக்கு அறிவியல் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. மேலும் இந்திய அரசாங்கம் இவருக்கு பாரத ரத்னா, பத்ம விபூஷண், பாரத ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. அறிவியல் துறையை பொறுத்தவரையில், அப்துல்கலாமின் சாதனை இன்றும் பலராலும் புகழப்படக்கூடியதாக தான் உள்ளது.

இளைஞர்களின் எழுச்சி நாயகனின் 89-வது பிறந்தநாள் தினம் இன்று.!

இளைஞர்களின் எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 89-ஆவது பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

ராமேஸ்வரத்தை பூர்விகமாக கொண்ட டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை படைத்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் கலாமின் புகழ் பரவ தொடங்கியது.

காலம் அவர்களின் சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரை தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து 2002-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக அப்துல் கலாம் பதவியேற்றார்.

இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் இவர், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூலை 27-ஆம் நாள் அவரின் உயிர் பிரிந்தது. கலாமின் மறைவிற்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, 2011-ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை  உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அப்துல் கலாம் அவர்களின் 89 ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என கலாமின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version