மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை மாநகராட்சியானது,கொரொனோ விதிமுறைகளை மீறியதற்காக 5 வீட்டுவசதி சங்கங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரொனோ 2ம் அலையின் பரவலை கட்டுப்படுத்த மும்பையின் குடிமை அமைப்பு, ஏப்ரல் 5ம் தேதி புதிய விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது. இந்த வழிகாட்டுதல்களின்படி,கொரொனோ கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் வீட்டுவசதி சங்கத்தின் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நவி மும்பை மாநகராட்சி (NMMC) எச்சரித்துள்ளது.அதாவது முதல் முறை மீறலுக்கு ரூ.10,000 […]