சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். சமூக ஆர்வலரும் மறைந்த சுதந்திர போராட்ட வீரருமான ஷாஹீத் பகத் சிங்கின் மருமகன் அபய் சிங் சந்து,சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறிகள் காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அபய் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில்,சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் வெள்ளிக்கிழமை (மே […]