ஆவின் நிறுனத்தில் மற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அமைச்சர் எச்சரிக்கை. ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் என்றும் மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, தமிழக அரசின் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை செய்து வருகின்றது. பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந் நிறுவனத்தில் தற்போது […]