சென்னை அருகே தடம் புரண்ட ரயில் பெட்டிகள்… வந்தே பாரத் உட்பட பல ரயில் சேவைகள் பாதிப்பு.!
சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். ஆனால், சிக்னல் கொடுத்தும் ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் உரிய பிளாட்பார்மில் நிற்காமல் சென்றது. இதனால், மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மின் கம்பிகள் சேதமடைந்தன. […]