சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். ஆனால், சிக்னல் கொடுத்தும் ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் உரிய பிளாட்பார்மில் நிற்காமல் சென்றது. இதனால், மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மின் கம்பிகள் சேதமடைந்தன. […]
ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆவடி மாநகராட்சியில், ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராணுவத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,200 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் சுமார் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. source : dinasuvadu.com