விநியோகஸ்தராக இருந்த வி. ரவிச்சந்திரன் ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வந்தார். முதல் திரைப்படமே விஜய் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தை தான் தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பூவெல்லாம் உன் வாசம், ரமணா, தென்றல், அன்னியன், மருதமலை, பச்சைக்கிளி முத்துச்சரம், ஆனந்த […]