ஆருத்ரா கோல்டு நிறுவன சுமார் (ரூ.2,438 கோடி) மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்க்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால், ஆர்கே சுரேஷ் ஆஜராகாத நிலையில், அவரது வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பட்டது. இதை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், லுக்அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், இவ்வழக்கு […]
ஆருத்ரா நிறுவன நிதி மோசடி தேசிய அளவில் கவனத்தை பெற தொடங்கியுள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளை இருந்தது. இந்த சூழலில், ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்குவதாக கூறியது. இதனை நம்பி ஏராளமான மக்கள் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், ஆருத்ரா நிறுவனம், வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் […]
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு ரூ.35 ஆயிரம் 10 மாதத்திற்கு வட்டி தரப்படும் என கூறினர். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் முதலீடு செய்தனர். அதன்படி சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ. 2438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் […]