“எந்தவொரு வேலை விளம்பரத்தையும் பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்” என்று இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தெரிவித்துள்ளது. போலியான வேலை விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் ஏதேனும் சுற்றறிக்கைகள் அல்லது காலியிடங்களைக் கையாளும் போது கவனமாக இருக்கவும், மோசடிகளைத் தவிர்க்க இந்திய விமான நிலைய ஆணையம் இணையதளத்தில் தொடர்ந்து சரிபார்க்கவும் என்றும் ஏஏஐ தெரிவித்துள்ளது. ஏஏஐ ஆனது 156 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ […]
நேற்று அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி அதன் ஒரு ஜோடி சக்கரங்கள் சேற்று நிறைந்த புல்வெளியில் சிக்கியதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. ஜோர்ஹட்-கொல்கத்தா வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டிகோ 6E757 விமானம் “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக ஜோர்ஹாட்டில் பல மணிநேரம் நிறுத்தப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டதாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் PTI இடம் தெரிவித்தார். விமானம் மதியம் 2.20 மணிக்கு புறப்பட […]
ஜார்க்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ .401.34 கோடி முதலீட்டில் ஏஏஐ உருவாக்கியுள்ள தியோகர் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் விரைவில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் மோடி தியோகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். 653.75 ஏக்கர் நிலப்பரப்பில் 4,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ .401.34 கோடி […]
கேரள விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ஏஏஐ அதிகாரிகள் டெல்லியில் இன்று கூட்டம் நடத்த உள்ளனர். கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக சிவில் விமான இயக்குநரகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான ஊடுருவல் சேவை உறுப்பினர்கள் இன்று டெல்லியில் அலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டம் ராஜீவ் காந்தி பவனில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அனைத்து பயணிகளுக்கும் உதவிகளை வழங்குவதற்காக […]
சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையமான AAI அலுவலகத்தில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த அலுவலகம் ஜூன் 7 வரையில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் மே 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய அலுவலகமான AAI-இல் […]