நாட்டையே அதிரவைத்துள்ள டெல்லி கொலையில் கைதுசெய்யப்பட்டுள்ள அஃப்தாப் அமின் பூனாவாலா மீதான பொய் கண்டறிதல் சோதனை என்றும் அழைக்கப்படும் பாலிகிராஃப் சோதனையின் மீதமுள்ள இரண்டு அமர்வுகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என , PTI செய்தி வெளியிட்டுள்ளது. பூனாவாலா ஏற்கனவே மூன்று அமர்வுகளுக்கு உட்பட்டுள்ளார், கடைசியாக வெள்ளிக்கிழமை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.அவரது நார்கோ சோதனை டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்தன. […]