டெல்லி : ஜூன் 1ம் தேதி ஆதார் கார்டு புதுப்பித்தலில் இருந்து டிரைவிங் லைசென்ஸ் என அவற்றின் விதிகளில் மாற்றம் ஏற்படுகிறது. ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்திலும், அரசு துறைகளுக்கான விதிகள் மாறும், சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வருகின்ற ஜூன் மாதம், சில முக்கிய சேவைகள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் தேவைப்படும் ஓட்டுநர் உரிமம், கேஸ் சிலிண்டர்களின் விலையும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுநர் […]
Aadhaar: ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலக்கெடுவானது ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலக்கெடு மார்ச் 14 -ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு (UIDAI) ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்! ஆதார் அட்டை என்பது மிக முக்கிய அடையாளச் சான்றாகும். […]
ஜாம்ஷெட்பூரில் விநாயகப் பெருமானின் முகவரி & பிறந்த தேதி குறிப்பிட்டு அச்சிடப்பட்ட ஆதார் அட்டை வைரலாகும் புகைப்படங்கள். இரண்டு வருட கோவிட் லாக் டவுனுக்கு பிறகு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் பலரும் விநாயக பெருமானின் சிலைகளை வாங்கி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நபர் விநாயகருக்கு ஆதார் அட்டையை அச்சிட்டு அதனை கட்டவுட் அடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது […]
குழந்தை ஆதார் அட்டையான பால் ஆதார் அட்டை 5 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் அட்டை இந்தியாவில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய அடையாள சான்றாக விளங்குகிறது. புதிதாக சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி வேலை, அரசாங்க சலுகைகள் பெறுவது என அனைத்திற்குமே ஆதார் நிச்சயம் தேவைப்படுகிறது. தற்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு பால் ஆதார் என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற்றோர்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை விண்ணப்பிக்க மருத்துவமனையில் குழந்தை பிறந்த சான்றிதழ் போதுமானது. […]
பான் கார்டை ஆதாருடன் இணைக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. வீட்டில் இருந்தே எளிமையாக எப்படி இணைக்கலாம் என்று பாருங்கள். பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு இந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஆதார் எண் மிக முக்கியமான ஒன்று. இதை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய பான் கார்டு செயலற்றதாக மாறும். […]
பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31 கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நாம் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய வங்கி கணக்கு மற்றும் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது நாம் பயன்படுத்தும் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க […]
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சோதனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைக்கு வரும் பலர் தங்கள் உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் நபருக்கு ஆர்டி-பி.சி.ஆர் செயலியில் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது. மேலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் […]
மதுபானம் வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சில நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதில், மதுபானங்கள் வாங்குவதற்கு ஆதார் […]
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க அளிக்கப்பட்ட காலக்கெடு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இதற்குள் ஆதார் இணைக்கப்படாத பான் கார்டு பயனற்றதாகிவிடும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் காலக்கெடுவை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக தகவல் தெறிவந்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது […]
ஆதார் அட்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆதார் அட்டையுடன் மற்ற சேவைகளையை இணைப்பது கட்டாயம் கிடையாது என்று நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்படுமென்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில் , நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆதாருடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது என்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண் என்பது தற்போது பல இடங்களில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இது முக்கிய ஆதாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் மொபைல் எண், வங்கி கணக்கு , அரசின் பல திட்டங்கள் என பலவற்றிற்கு ஆதார் ஆதாரம முக்கியமாக பார்க்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இதில் தனி மனித உரிமை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை. இதன் அடிப்படையில் ஆதார் தனியார் நிறுவனங்கள் கூட கட்டாயமாக கேட்டபதை வழக்காக உச்சநீதிமன்றம் விசாரித்தது. […]
ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. புதுடெல்லி, ஆதார் இல்லையென்று பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என ஆதார் ஆணையம் கூறியுள்ளது. பள்ளிகள் ஆதார் இல்லையென்று மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது, அவ்வாறு மறுத்தால் அது தவறானது மற்றும் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது கிடையாது என ஆதார் ஆணையம் தெரிவித்தது.மாணவர்கள் சேர்க்கைக்கு பள்ளிகள் ஆதாரை கேட்கும் நிலையில் இந்த உத்தரவு மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிம்மதியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு ஆதார் ஆணையம் […]
மத்திய அரசு, ஆதார் எண்ணுடன் 16 கோடியே 65லட்சம் பான் எண்களும், 87கோடியே 79லட்சம் வங்கிக் கணக்குகளும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவையில் இது குறித்த கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் சிவப் பிரதாப் சுக்லா எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் மார்ச் ஐந்தாம் தேதி நிலவரப்படி 16கோடியே 65லட்சம் பான் எண்களும், மார்ச் இரண்டாம் தேதி […]
டிரிப்யூன் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத முகவரை வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான லாக் இன் ஐ.டி.யையும் பாஸ்வேர்டையும் பெற்றதாகவும், இதற்காக பே டி.எம். மூலம் 500 ரூபாய் செலுத்தியதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு மூலம் நூறு கோடி ஆதார் எண்கள், பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எளிதில் பெற்றுவிட முடியும் என்று அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
ஆதார் பதிவில் விதிமுறைகளை மீறியதால் 50,000 ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனை மின்னணுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப மாநில அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் இன்று காலை புது டெல்லியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார் . மேலும் அவர் டிசம்பர் 1 2017 வரை 71.24 கோடி மொபைல் எண்கள்,14.63 கோடி நிரந்தர வங்கி கணக்கு எண்கள் மற்றும் 82 கோடி வங்கி கணக்குகள் ஆதார் உடன் இணைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது. இன்று முதல் பக்தர்கள் கூண்டில் அடைபடாமல் ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்கான டோக்கன் பெற ஆதார் கட்டாயம் என கோவில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமாக உள்ளது. அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் மதிய உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. […]
வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.