டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த துறை மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மீது ஊழல் குற்றசாட்டு எழுந்தால் சிபிஐ, பொருளாதார விசாரணை பிரிவினர் அந்த குற்றம் பற்றி விசாரணை மேற்கொள்வர். அமலாக்கத்துறையானது அந்த ஊழலில் நிகழ்ந்ததாக கூறப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை மேற்கொள்ளும். இந்த அமலாக்கத்துறை (ED) சோதனை என்பது பரவலாக எதிர்க்கட்சி அரசியல் […]